சுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா

சுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை (17.05.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

தேர்த்திருவிழா அன்று ஆலயத்தில் காலை 07.00 மணிக்கு விசேடஅபிசேகம் மற்றும் பூசைகள் இடம்பெற்று கதிர்வேலர் உள்வீதி வலம் வந்து திருநடனம் ஆடியவாறு முற்பகல் 11.00 மணிக்கு சித்திரத்தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.


 

அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா எனக் கோசமெழுப்ப நாதசுர, தவில் கலைஞர்களின் மல்லாரி முழங்க கதிர்வேலாயுதசுவாமி வெளிவீதி வலம் வந்தார்.

வருணபகவான் பன்னீர் தெளிப்பதுபோல் சிறுமழை பெய்து கொண்டிருக்கும் வேளை கதிர்வேலாயுதசுவாமி வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

நண்பகல் 13.00 மணியளவில் இருப்பிடம் திரும்பிய கதிர்வேலாயுதசுவாமிக்கு பச்சை சாத்தி திருநடனமாக ஆலய இருப்பிடத்தை அடைந்தார்.

அங்கு உற்சவகுரு சிவாகமரத்னம், வேதாகம விசாரதா ந.ராமு(எ)அகத்தீஸ்வரக்குருக்கள் தலைமையில் கிரியா கலாமணி வேதசாகரம் பிரம்மஸ்ரீ P.துளசிதீஸ்வரக்குருக்கள், இளஞ்சுடர் பிரம்மஸ்ரீ யு.மதுஷன்சர்மா (ஐ.வு),சிவாகமபூஷணம் சிவஸ்ரீ ஸ்ரீகர சோமஸ்கந்தகுருக்கள் உட்பட ஆறு குருமார் சண்முகார்ச்சனையை பக்திபூர்வமாக நடத்தினர் அதனைத் தொடர்ந்து மாலைத்திருவிழா இடம்பெற்று கதிர்வேலாயுதசுவாமியின் தேரடித்திருவிழாவும் நடைபெற்றது.

தேர்த்திருவிழாவில் ஒன்றுகூடிய பக்தர்கள் காவடி எடுத்தும்,பிரதட்டை செய்தும் பெண்கள் அடியழித்தும், கற்பூரச்சட்டி, பாற்குடம் ஏந்தியும் தமது நேர்த்திகடன்களை பூர்த்தி செய்தனர்.

இம்முறை தேர்த்திருவிழாவில் செங்காலன் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பெரும் எண்ணிக்கையான சுவிஸ் நாட்டவர்களும் பங்குபற்றியமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

சுவிஸ் நாட்டவர் ஒருவர் காவடி எடுத்து தாள லயத்துடன் ஆடி வந்தமை சகலரின் மனங்களையும் உருக்குவதாக அமைந்தது.

பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா நேற்று (26.05.2019) பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் காலைமுதல் இடம்பெற்ற விசேடஅபிசேகம், பூசைகளைத் தொடர்ந்து வெளிவீதியில், வடக்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த தீர்த்தக்குளத்தில் கதிர்வேலாயுதசுவாமி தீர்த்தமாடி பக்தர்களுக்கு தீரத்தம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் யேர்மன் கம் காமாட்சி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பாஸ்கரக்குருக்கள் பங்குபற்றியதுடன் சிறப்பு ஆசிகளையும் வழங்கினார்.

சூரிச் முருகன் ஆலய பிரதமகுரு 'சிவாகம பாஸ்கரர் ' வி.கல்யாணக்குருக்கள், யேர்மன் சிங்கன் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவதர்மசீலர் சிவதர்ம பூசணம் சிவஸ்ரீ இரா.சந்திரகாந்தக்குருக்கள் மற்றும் லய பிரகாஸ் சர்மா ஆகியோர் தீர்த்தோற்சவத்தில் பங்குபற்றினர்.

இரவுத் திருவிழாவில் ஊஞ்சலைத்தொடர்ந்து கொடியிறக்கத்துடன் உற்சவம் பூர்த்தியானது.

பெருந்திருவிழாவை சிறப்புற நடத்திய அகத்தீஸ்வரக்குருக்கள்,முத்துசாமி குருக்கள், சோமசிறிதரக்குருக்கள் மற்றும் உற்சவத்திற்கு அனுசரணை வழங்கிய U.N.தர்மரட்ணம் (சிறுவன்) ஆகியோர் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.

இன்று திங்கடகிழமை திருக்கல்யாணம் இடம்பெற்றது. நாளை வைரவர்மடை இடம் பெறவிருக்கின்றது.

லண்டனிலிருந்து வருகைதந்துள்ள சிவாகமரத்னம், வேதாகம விசாரதா ந.ராமு(எ)அகத்தீஸ்வரக்குருக்கள், ஆலயபிரதமகுரு சிவாகமரத்னம் கிரியா கலாமணி முத்து மீனாட்சி சுந்தரம் முத்துசாமி குருக்கள், யாழ்.சுன்னாகம் கதிரமலை சிவன்கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரிய ரத்னம் சிவஸ்ரீ சோம சிறிதரக்குருக்கள் ஆகியோர் பெருந்திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.

செங்காலன் நாதசுர வித்துவான் மா.செந்துரன் தலைமையில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தவில் வித்துவான் மு.நாகேந்திரம் மற்றும் நாதசுர வித்துவான் குணதாஸ் மோகனதாஸ், தவில் வித்துவான் சுதா கோபி ஆகியோரின் மங்கள இசை சிறப்பாக தினமும் இடம்பெற்றது.

தாயகத்தில் இடம்பெறும் ஒரு பெருந்திருவிழாவில் பங்குபற்றிய ஓர் உணர்வை இவ்வாண்டு உற்சவம் எமக்கு நினைவுபடுத்தியது என்று பக்தர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஆன்மீக செய்திகள் 29.05.2019

ஆன்மீகச்செய்திகள்

22.02.2019 இன்றைய ராசி பலன்

மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...

நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்!!

கீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019

இன்றைய ராசி பலன் 21.02.2019

மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...

இன்றைய ராசி பலன் 20.02.2019

ஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

ஆன்மீக செய்திகள்.   மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...

தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை

இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...

இன்றைய ராசி பலன் 19.02.2019

மேஷம் இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத...

இன்றைய ராசி பலன் 17.02.2019

மேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...

இன்றைய ராசி பலன் 16.02.2019

மேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...

தங்கம் வாங்க நல்ல நாட்கள்

பொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...

<< 9 | 10 | 11 | 12 | 13 >>

செய்திகள்

ஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்!!

யாழ்ப்­பா­ணம்,  பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...

வவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

யாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...

நல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.,   வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...

சாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்

சாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...

தொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்

நிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...

நல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்

நல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...

யாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...

யாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.நெஞ்சு வலிக்கிறது என கூறி மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் சாவகச்சேரி சுகாதார வைத்திய...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

1 | 2 | 3 | 4 >>

வெளிநாட்டுச்செய்திகள்

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி

யாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.    செல்போர்ண் வீதியில்...

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...

பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு!

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....

1 | 2 | 3 | 4 | 5 >>