சுவிஸில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிஸில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.


 

பின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு தப்பியுள்ளது.

கயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகாராக அளித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை தேடி வருகிறது.

உலகம், 06.12.2018

உலகச்செய்திகள்

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...

20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம்...

பேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்!

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...

சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

1 | 2 | 3 | 4 | 5 >>