சுவிஸில் மெய்வல்லுனர் போட்டியில் சாதனை படைத்த ஈழத்தமிழன்

சுவிஸில் மெய்வல்லுனர் போட்டியில் சாதனை படைத்த ஈழத்தமிழன்

சுவிஸ் சூரிஷ் நகரை அண்டிய சிலிரனில் வசிக்கும் தமிழ் இளைஞனான சுகந்தன் சோமசுந்தரம் அண்மையில் ஐரோப்பிய ரீதியில் நடைப்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் சுவிஸ் நாட்டின் சார்பில் 4x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றி, முதல் சுற்றில் (38:56s) 2ம் இடத்தை பெற்று தெரிவாகி இறுதிப் போட்டியில் (38:53 s) 4 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தினி தம்பதிகளின் புதல்வனான இவர், தனது 22 வது வயதில் புதிய சாதனையளார் என்ற பாராட்டைப் பெற்று சுவிஸ் நாட்டு அனைத்து பிரஜைகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

மேலும், 100 மீற்றர் ஓட்டத்தை 10:51 செக்கனிலும், 200 மீற்றர் ஓட்டத்தை 21:29 செக்கனிலும் ஓடி தனது இளம் வயதில் சுவிஸ் நாட்டின் சாதனை வீரன் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்