சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம் தனது மோட்டார் சைக்கிளை திருத்த எவ்வளவு முடியும் என கேட்டுள்ளார், அதற்கு அவர் முழுமையாக 33 ஆயிரம் முடியும் என்று கூறி கணக்கு எழுதி கொடுத்துள்ளார். அப்போது உடனடியாக பத்தாயிரம் ரூபாய் முன்பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.


   
தொடர்ந்து மறுநாள் சுவிஸ் நபரை சந்தித்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அனைத்து செலவுகளுக்குமான கணக்கு கொடுத்தால் பின்பும், கூடுதல் பணம் கேட்டுள்ளார், அப்போது அவர் நீங்கள் 33 ஆயிரம் என்றுதானே கூறினீர்கள் நான் 10 ஆயிரம் முன்பணம் தந்துவிட்டேன் என்னும் 23 ஆயிரம் தந்தால் சரியென கூறியுள்ளார்.

அப்போது மெக்கானிக் உட்பட்ட குழுவினர் நாங்கள் கேட்ட பணத்தை தா வெளிநாட்டிலிருந்து வந்த உன்னிடம் காசு இல்லையா என மிரட்டிக்கொண்டு இரும்பு கம்பியால் சுவிஸ்சிலிருந்து வந்த யாழ்ப்பாணத்தவரை கடுமையாக தாக்கியதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சொந்த நாட்டை விட்டு உறவுகளை விட்டு வெளிநாடு சென்று கஸ்ரப்பட்டு உழைத்து விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிவந்தால் அவர்கள் ஏதோ வெளிநாடுகளில் வீதிகளிலிருந்து காசை அள்ளிக்கொண்டுவருவதுபோல் சிலர் நினைத்துக்கொண்டு அவர்களிடம் பணம் புடுங்கும் வேலையை ஈழத்தில் உள்ள சிலர் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுச்செய்திகள் 17.07.2019

வெளிநாட்டுச்செய்திகள்

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழ் மண்ணின் மார்தட்டும்! வரலாற்று பதிவு?

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" திறந்து வைக்கப்பட்டுள்ளது.யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்...

யாழ்- ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர்கள் கைது

யாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கசிப்பு ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த இடம்...

யாழில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. இங்கு உற்பத்தி...

யாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்

வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...

வல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா!

தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார்.   வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....

யாழில்,களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...

யாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...

யாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய ராசி பலன் 17.02.2019

மேஷம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில்...

இன்றைய ராசி பலன் 16.02.2019

மேஷம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.ரிஷபம் இன்று பொருளாதார...

தங்கம் வாங்க நல்ல நாட்கள்

பொதுவாக வீட்டில் தங்கம் சேர்ந்தால் லட்சுமி கடாட்சம் என்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது வீட்டில் நிலையாக தங்கும்.பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவை விரைவில் நம் கையை விட்டு போகும்...

இன்றைய ராசி பலன் 15.02.2019

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பணவரவு...

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்… துலாம் முதல் மீனம் வரை

துலாம் ராசி அன்பர்களே! 13.2.19 முதல் 31.8.20 வரை உங்களுக்கு ராகுவும் கேதுவும் புது மலர்ச்சியை அளிக்கப்போகிறார்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ல் இருந்த ராகு பகவான் இப்போது 9 -ல் அமர்வதால், சோம்பல் நீங்கும். முடிக்கப்படாதிருந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம்...

இன்றைய ராசி பலன் 14.02.2019

மேஷம்இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.ரிஷபம்இன்று குடும்பத்தில்...

ராகு-கேதுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி...

இன்று ராகு கேது பெயர்ச்சி : ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்

நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். எந்த ராசியில்...

இன்றைய ராசி பலன் 13.02.2019

மேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...

ஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று

யாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா  இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.இன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள்...

<< 11 | 12 | 13 | 14 | 15 >>