சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை,

சுவிஸ் சூரிச்  அட்லிஸ்வில் பகுதியில்   வங்கிக் கொள்ளை,

சுவிட்சர்லாந்தில் பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு, வங்கிக் கொள்ளையர்கள் இருவர் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை சூரிச் பகுதியிலுள்ள Adliswilஇல் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் நுழைந்த வங்கிக் கொள்ளையர்கள் இருவர் அந்த பெண் வங்கி ஊழியருக்கு கைவிலங்கிட்டு விட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

காலையில் தனியாக வந்த அந்த பெண் ஊழியர் வங்கியை திறந்தார்.முகத்தை மறைக்கும் வகையிலான குளிர் தொப்பி அணிந்திருந்த இருவர், அவ்வழியே வந்தனர்.

அவர்களில் ஒருவர் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு வரும் தள்ளு வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார்.

சட்டென வங்கிக்குள் நுழைந்த அவர்கள், அந்த பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து, அவருக்கு கைவிலங்கு ஒன்றை மாட்டி, ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.

பின்னர் வங்கி லாக்கரைத் திறந்து ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அவர்கள் குளிருக்கான தொப்பியும் வெளிர் வண்ண கால் சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவித்த பொலிசார், தள்ளு வண்டியில் குழந்தைக்கு பதில் பொம்மை ஒன்றை வைத்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

அவர்கள் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைபட்டவர்கள் என்றும் 180 சென்றிமீற்றர் உயரம் உடையவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக அந்த பெண் வங்கி ஊழியருக்கு அந்த கொள்ளையர்கள் எந்த காயமும் ஏற்படுத்தவில்லை.கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

உலகம், 06.12.2018

உலகச்செய்திகள்

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு...

சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...

இலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்

சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று  மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில்  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>