டெங்கு நோயால் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் மரணம்

டெங்கு நோயால் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் மரணம்

டெங்கு நோயினால் சென்ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்கும் 14 வயது மாணவன் மரணமானார். 

கடந்த 13ம் திகதி நொதேன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் சிறுநீரகம், ஈரல் ஆகியன பாதிக்கப்பட்டபின் நொதேன் தனியார் வைத்தியசாலையில் இருந்து அவசர சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

சென்ஜோன்ஸ் கல்லுாரியில் தரம் 9 இல கல்வி பயிலும் மாணவனான நாவலா் வீதி யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த மீனலக்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்று மாத்திரம் 8 போ் யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயின் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனா்.

இதே வேளை சில தனியார் வைத்தியசாலைகள் சரியான முறையில் சிகிச்சைகள் அளிக்காமல் பணத்திற்காக நோயளா்களை வைத்திருக்கும் நவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் நோய் தீவிரமடைந்தவா்களை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்காது பணத்திற்காக  தங்க வைத்திருப்பதால் இவ்வாறான பல அநியாய இழப்புக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.