தந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற மகன் விபத்தில் பலி -

  தந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற மகன் விபத்தில் பலி -

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹையேஸ் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் மாதம்பை பகுதியில் இடம்பெற்றது. கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்ற கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த காந்தி சுஜி (வயது 19) என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளையஞரின் தந்தையும், நண்பரும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞர் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழத்துக்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. -