தமிழனின் ஆதிதெய்வம் முருகனே! 10,000 ஆண்டுகள் பழமை

தமிழனின் ஆதிதெய்வம் முருகனே! 10,000 ஆண்டுகள் பழமை

பரிபாடல், குறுந்தொகை நூல்களில் ஆதி தமிழர்கள் மழையை தெய்வமாக கருதினர் என்றும், மழையின் தெய்வம் இந்திரன்யென்றும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக குமரிகாண்டம் இருந்த போதே நாம் கடவுளாக முருகப்பெருமானை வணங்கியதும் 10,000 ஆண்டிற்கு முன் முருகனுக்காக நம் முன்னோர்கள் கோயில் கட்டியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழர்கள் முதலில் வாழ்ந்த குமரிகண்டம் முதல் பல்வேறு கண்டங்களில் மழைக்காக இந்திரனை வழிப்படுவதுடன் அதற்கு இந்திரன் விழா ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் முருகன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் கி.மு 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என்று கணிக்கின்றனர்.

கல்லால் ஆன வேல் இந்த கோயிலில் அமைக்கப்பட்டதன் சாட்சியாகவே இது முருகன் கோயில் என்கிறார்கள்.

தற்போது கோயில்கள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி கட்டப்படுகிறது, ஆனால் இந்த கோயில் சற்றே மாறாக வடக்கு நோக்கி கட்டியுள்ளனர்.

சுடுசெங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் அந்த காலத்தில் கட்டப்பட்ட சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டிடங்களில் இருந்து தனித்து காணப்படுவதோடு அறிவியல் முன்னோடிகளாக திகழ்ந்துள்ளனர்.

கீரர் பிரியன் என்பவர் இந்த கோயிலுக்கு 10 பொன் நன்கொடை தந்திருப்பதாகவும், முதலாம் ராஜராஜ சோழன் அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தகவல்களும், குறவை கூத்துப்பற்றியும் இங்கு உள்ள கல்வெட்டுகளில் இருந்து அகழ்வாய்வாளர்களால் கண்டுபிடிக்கபட்டது.

பச்சைக் கல்லினால் ஆன சிவலிங்கம் ஒன்றும் இங்கு கண்டெடுக்கப்பட்டது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இந்த கோயில் அழிவுற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த கோயில் பழமையான கோயில் என்று அகழ்வாய்வாளர்களால் நம்பப்படுகிறது.


களிமண்ணால் அணை கட்டிய தமிழன்! உலகமே வியக்கும் அதிசயம்