தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் விபத்தில் இரு ஈழத்தமிழர் மரணம்

தமிழ் நாடு நாமக்கல் மாவட்டம் வடத்தூர் செல்லும் வீதியில் இலங்கை அகதிகள் செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 
இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்று எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர்கள்  கொல்லிமலை அடிவாரத்திலுள்ள வாழவந்தி என்று இடத்திலுள்ள ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் நிஷாந்த் (23),  கனகராஜ் (25),  சுலக்சன் (24)  மூவரும் இரவு வேலை முடித்துவிட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 
 
அப்போது வடவத்தூர் செல்லும் வீதி அருகே வந்த போது, எதிரே மற்றொரு இலங்கை அகதியான கண்ணன் (42) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
 
இந்த சம்பவத்தில் நிஷாந்த் சம்பவிடத்திலேயே உயிரிழந்தத்துடன். படுகாயமடைந்த கண்ணன், கனகராஜ், சுலக்சன் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு நாமக்கல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது கண்ணனும் உயிரிழந்தார். 
 
கனகராஜ், சுலக்சன் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் நாமக்கல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.