தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறையிலேயே நடைபெறும்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறையிலேயே நடைபெறும்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பழைய முறையிலேயே நடத்தப்படும் என்று கல்வியமைச்சர்  தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்த வருடம் இந்தப் பரீட்சை நடைமுறை வேறுபடும் எனவும், இப்போது வழங்கப்படும் இரண்டு வினாத்தாள்களுக்குப் பதிலாக அடுத்த வருடம் முதல் ஒரேயொரு வினாத்தாளே வழங்கப்படும் எனவும், அவ்வாறு கொடுக்கப்படவுள்ள வினாப்பத்திரத்துக்கு விடையளிக்கும் காலஎல்லை ஒரு மணித்தியாலமா அல்லது ஒன்றரை மணித்தியாலங்களா என்பதைப் பற்றி ஆலோசனை நடந்து வருகின்றது எனவும் அவர் கூறினார்.

மேலும் இம்முறை நடக்கவுள்ள பரீட்சையில் மாணவர்களை அதிக சிரமத்துக்கு உள்ளாக்காத வகையில் வினாப்பத்திரங்கள் தயாரிக்கப்படும் எனவும், இதற்கான கைநூல் ஒன்றைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அச்சிட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கைநூல் இலாப நோக்கமற்ற வெளியீடு எனவும், புத்தகமொன்றை 140 ரூபா சில்லறை விலைக்கும், 120 ரூபா மொத்த விலைக்கும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் நலனை உத்தேசித்து இந்தக் கைநூல் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கல்வியமைச்சர்  மேலும் தெரிவித்தார்.