தாயின் சங்கிலியை அடைவு வைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த யாழ் மாணவன்

தாயின் சங்கிலியை அடைவு வைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த யாழ் மாணவன்

தனது தாயின் சங்கிலியை அடைவு வைத்து தனது நண்பர்களுக்கு பிரபல விடுதியில் மது விருந்து கொடுத்துள்ளான் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன்.

2016ல் க.பொ.த. உயர்தரப்பரீட்சை  எடுக்கும் 17 வயது மாணவனே நேற்று இந்தத் திருவிளையாடல் புரிந்துள்ளார்.

தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் மேற்படி மாணவர்.

இம் மாணவனின் தந்தை ஒரு கிராம சேவகராகவும் தாயும் அரச அலுவலராகவும்  இருப்பதாகத் தெரியவருகின்றது.

நேற்று இரவு  8 மணியளவில் கொக்குவில் பகுதியில் உள்ள இம் மாணவனது வீட்டுக்கு ஆட்டோ ஒன்றில் நிறை வெறியில் வந்து இறங்கிய இம் மாணவனின் நண்பர்கள் ஆட்டோவினுள்  மது போதையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை கீழே இறக்க முற்பட்ட போது மாணவனின் தாயார் வெளியே வந்து மாணவனின் நிலையைப் பார்த்து அலறியதாகத் தெரியவருகின்றது.

அயலவர்களும் அங்கு கூடவே மாணவனின் நிலையை அறிந்த பெற்றோர் மாணவனை உள்ளே கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் இரவிரவாக நடந்த விசாரனையிலேயே மாணவன் தனது சங்கிலியை அடைவு வைத்துப் பணம் பெற்று விருந்து அளித்த விடயம் வெளியே வந்துள்ளது.

-