திரு கணபதிப்பிள்ளை அருணாசலம்

திரு கணபதிப்பிள்ளை அருணாசலம்

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மாசவன் சந்தி, நீர்கொழும்பு கடல் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அருணாசலம் அவர்கள் 28-06-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

அருந்ததி (கனடா) அம்பிகா (கனடா) ஆனந்தராசா (ஜெர்மனி) அனுஷியா (லண்டன்) அகிலேஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பண்டிதர் சிவசம்பு, டாக்டர் நாகலிங்கம், சிவநாகம்மா, மற்றும் சரவணமுத்து (இளைப்பாறிய தபாலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரியராசா (கனடா) சூரியகுமார் (கனடா) குமுதினி (ஜெர்மனி), டாக்டர் இராஜயோகன் (லண்டன்) சிவாநந்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராமி, தனுஷன், கிரிசன், தமிழரசன் (சங்கர்) தமிழினி (சந்தியா) யாழினி (சரண்யா) அக்ஷயா, அஞ்சனா, அபர்ணியா, செல்வி, அஸ்வினி, ஆரணி, சரண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று நீர்வேலி வடக்கு மாசவன் சந்தி என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-07-2014 புதன்கிழமை அன்று மு. 09:00 மணியளவில் சமயக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்