தென்மராட்சியில் இன்று இடியுடன் கூடிய கடும் மழை!

தென்மராட்சியில் இன்று இடியுடன் கூடிய கடும் மழை!

தென்மராட்சி பிரதேசத்தில் ஒரு மணி நேரம் சுழல்காற்றுடன் பெய்த கடும்மழை மற்றும் இடிமின்னல் தாக்கத்தினால் பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

இன்று வெள்ளிக்கிழமை பி.ப. 2.30 மணி தொடக்கம் 3.30மணி வரை தொடர்ச்சியாக கண்ணைப் பறிக்கும் பயங்கர இடி மின்னலுடன் பெருமழை பெய்தது.

இந்தவேளை, சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் சுழல்காற்றினால் இரு கட்டடஙகளின் கூரைத் தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள தோட்டவெளியில் உருவான சுழல் காற்று அங்குள்ள அரைக்கும் ஆலையின் கூரைத் தகடுகளையும் அருகில் இருந்த வீட்டுக் கூரைத் தகடுகளையும் பிடுங்கி எறிந்தன.

இதேவேளை, மின்னல் தாக்கியதில் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மின் இணைப்புகள் முற்றாக எரிந்துள்ளன. பாடசாலை முடிந்து மாணவர்கள் அனைவரும் வீடு சென்றதால் பாதிப்பு ஏற்படவில்லை.