தென்மராட்சியில் மழையின்மையால் விவசாயிகள் பாதிப்பு

தென்மராட்சியில்  மழையின்மையால்  விவசாயிகள் பாதிப்பு

தென்மராட்சிப் பிரதேசத்தில் சீரான மழைவீழ்ச்சியின்மையால் நெற்பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளது என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,தென்மராட்சி பிரதேசங்களான தனங்களப்பு, மட்டுவில், சரசாலை, வேம்பிராய், மந்துவில், வரணி, மிருசுவில், உசன், எழுதுமட்டுவாழ் போன்ற பகுதிகளில் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மழையின்மையால் பாதிப்படைந்துள்ளனர்.இப்பகுதியில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் நெற்பயிர் எரிந்து அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.நெல் வயல்களிலுள்ள களைகளைப் பிடுங்குவதற்கும், உரம் போடுவதற்கும் தற்பொழுது மழை தேவையாகவுள்து. இதனால் தாம் மழையை எதிர்பார்த்திருப்பதாகவும் இவ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இன்னும் ஒரு சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி குறைவடையுமாயின் நெற்பயிர்ச் செய்கை முற்றாகப் பாதிப்படையும் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை கடந்த வருடமும் இப்பகுதியில் மழைவீழ்ச்சி குறைவாக இருந்தமையால் நெற்பயிர்ச் செய்கை