தெல்லிப்பளை கிழக்கு கிணறுகளிலும் எண்ணெய் கசிவு

தெல்லிப்பளை கிழக்கு கிணறுகளிலும்  எண்ணெய் கசிவு

யாழ். தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார்,

சனிக்கிழமை (13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து சனிக்கிழமை (13) சுகாதார பரிசோதகர், சுகாதார தொண்டர்களுடன் சென்று கிணறுகளை பார்வையிட்டுள்ளோம்.

இப்பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக வலி. வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்துள்ளோம். அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். -