தெல்லிப்பளை வைத்தியசாலையில் இளைப்பாறும் மண்டபம் திறந்துவைப்பு

தெல்லிப்பளை வைத்தியசாலையில் இளைப்பாறும் மண்டபம் திறந்துவைப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் இளைப்பாறும் முகமாக இந்தியாவின் றோட்டறிக் கழகத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இளைப்பாறும் மண்டபம் இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம் உமாசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைப்பாறும் மண்டபத்தை தெல்லிப்பழை தூக்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் ஆறு திருமுருகன் மற்றும் இந்தியாவில் இருந்த வருகைதந்ந றோட்டறிக் கழக ஆளுநர் ஜ.எஸ்.ஏ.நாசர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

 மண்டபத்தின் பெயர் பலகையை நல்லூர் றோட்டறிக் கழகத்தின் எதிர்காலத் தலைவர் மற்றும் இந்தியாவின றோட்டறிக் கழக ஆளுநரும் இணைந்து திறந்து வைத்தார்கள். குறிப்பிட்ட மண்டபம் இந்தியாவின் றோட்டேரியன் ஜெயகிருஸ்ணாவினால் அவருடைய மனைவி அமரர் பிரியதர்சனி ஞாபகார்த்தமாக சுமார் நான்கு லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து புற்றுநோய் வைத்தியசாலை மண்டபத்தில் உரையாடலும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகைதந்த சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட றோட்டேரியன்கள் கலந்துகொண்டனர்.