நயினாதீவு நாகபூஷணி அம்மன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

 நயினாதீவு நாகபூஷணி அம்மன்  கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை பகல் 12 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

 
தொடர்ந்து 16 தினங்கள்  திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.