நல்லுார் கந்தனுக்கு இன்று கொடிச்சீலை கொண்டு வரப்பட்டது -

நல்லுார் கந்தனுக்கு இன்று கொடிச்சீலை கொண்டு வரப்பட்டது -

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான கொடிச்சீலை இன்று காலை ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.

காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியில் அமைந்துள்ள வைத்தியர் ந.சத்தியமூர்த்தியின் இல்லத்திலிருந்து சமய ஆராதனைகளின் பின்னர் சிவஞான முதலியார் பரம்பரையில் வந்த தர்ம குலசிங்கத்தால் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வேல் முருகன் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் பக்தர்கள் புடைசூழ பாரம்பரிய முறைப்படி சித்திரத்தேரில் வைத்து எடுத்துவரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாரிடம் நண்பகல் 10 மணியளவில் கையளிக்கப்பட்டது