நல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்

நல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில் யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய போதே பெருந்திருவிழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் விளக்கமளித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், இந்து மதப் பெரியார்கள், யாழ். மாநகர ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உதவிப் பிரதேச செயலாளர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை அதிகாரிகள், யாழ். மாநகர சபை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் சங்கம், பொது அமைப்புக்கள், தொண்டர் சேவையில் ஈடுபடவுள்ள அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சுற்றாடலில் வதிகின்ற - தண்ணீர்ப்பந்தல் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாலில் அறிவிக்கப்பட்டுள்ள நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் வருமாறு,,

வழமை போல, இம்முறையும் நல்லூர் உற்சவ காலத்தில் தேவையான பொது, சுகாதார, போக்குவரத்து ஏற்பாடுகளை மாநகரசபை செயற்படுத்தவுள்ளது. உற்சவ காலத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்களின் நலன் கருதி ஆலய வீதிகளுக்கு மணல் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீதித் தடைக்குள் - ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் பகுதிகளினுள் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

வீதித்தடைகளினுள் வதிகின்றவர்களுக்கான உள்நுழைவு அனுமதி அந்ததந்தப் பகுதி கிராம சேவையாளர்களின் பதிவின் பிரகாரம், பிரதேச செயலக மற்றும் மாநகர சபை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும். இவை தவிர ஆலய நிர்வாகத்தினரால் ஆனுமதிக்கப்படுபவர்களுக்கும், மாநகர சபை உறுப்பினர்களுக்கும் வீதித் தடைகளின் ஊடாகப் பயணிப்பதற்கான உள்நுழைவு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.

வழமையான இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும். தேசிய பாதுகாப்புக் கருதி பொலிசாரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய வீதித்தடைகளில் பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஆலயப் பிரதேசத்தினுள் அடங்கும் பருத்தித்துறை வீதி, கோவில் வீதிகளுக்கான மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுப் போக்குவரத்து மார்க்கங்கள் மாற்றியமைக்கப்படும்.

இம்முறை ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன் வீதி - பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

காவடிகள் வருகின்ற முன் வீதி தவிர்ந்த ஏனைய பக்கங்களின் வழமையை விட சற்றுத் தள்ளி கடைகள் அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.

ஏப்ரல் 21 (ஈஸ்டர்) தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொலீஸ் தலைமை அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பொலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் 19.07.2019

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...

இன்றைய இராசிபலன்கள் (18.10.2019)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

இன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

இன்றைய இராசிபலன்கள் (21.09.2019)

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...

இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019

மேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...

கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...

நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...

பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்

பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019

1 | 2 | 3 | 4 | 5 >>