நல்லூர் வீதியில் தோன்றியுள்ள பெரும் ஆபத்து

நல்லூர் வீதியில் தோன்றியுள்ள பெரும் ஆபத்து

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும் ஓயில் வழுக்கியமையால் நேற்றும் அவ்வீதியில் உந்துருளி ஈருருளி போன்றவற்றில் பயணத்தவர்கள் வழுக்கி விழுந்துள்ளனர்.


 

இன்று திங்கட்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு காளாஞ்சி கொடுக்கும் வைபவத்திற்காக காலை மாநகர சபையால் வீதிக்கு நீர் தெளிக்கப்பட்டது.

இதனால் ஓயில் படலம் வீதியில் காய்ந்தநிலையில் காணப்பட்டாலும் நீர் ஊற்றப்பட்டதால் வீதியிலிருந்த மணல் கழுவப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவ்வீதியில் உந்துருளியில் சென்ற இருவர் வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

இதில் குழுந்தையை ஏற்றிச்சென்ற தாயும் மற்றும் ஒருவரும் விழுந்து சிறு காயமடைந்துள்ளனர். இதையடுத்து மாநகர பணியாளர்கள் வீதியால் செல்பவர்களை மெதுவாக செல்லுமாறு கூறியதுடன் பின்னர் வீதிக்கு மணல் போடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சிறிய நேரம் மழை பெய்தாலே மீண்டும் ஓயில் வழுக்கும் நிலையே ஏற்படும். எனவே உடனடியாக மாநகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வீதியில் உள்ள ஓயில் படிமத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்திகள் 03.05.2019

செய்திகள்

சென்னை பொலிஸாரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட யாழ் தமிழரின் மகன்

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது 12 வயது மகனை பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார் அவரது தந்தை. குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (44). ஈழத் தமிழரான...

யாழ் புத்தூர் ஆவரங்காலில் முதியவரின் சடலம் மீட்பு

 யாழ்.ஆவரங்கால் சிவன் கோவில் பகுதியிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.இவர் நெல்லியடியைச் சேர்ந்த நாகமுத்து சதானந்தன் என்று அச்சுவேலி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.   மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான்  முன்னிலையில்...

இலங்கையில் அதிக பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

புற்றுநோய் தாக்கத்திற்குள்ளான பெரும்பாலான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவே வருகை தருவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்  இது தொடர்பாக தெரிவிக்கையில்,  கடந்த வருடத்தில் மட்டும் 1250 புற்றுநோயாளர்கள்...

யாழ்.வடமராட்சி பிரதேசங்களில் நாளை முதல் மது ஒழிப்பு நிகழ்வு

வடமராட்சி பிரதேசங்களில் சட்டவிரோத மதுபாவனை ஒழிப்பு நிகழ்வு நாளை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை மது வரி திணைக்களம் அறிவித்துள்ளது.    இதன்படி கரவெட்டி,பருத்தித்துறை, மணக்காடு ஆகிய 3 பிரதேச செயலகங்களுக்கு கீழுள்ள 22 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் இந்நிகழ்வு...

அச்சூர்க்குரிசில் விருதுபெறும் வில்லிசைக் கலைஞர் சின்னமணி .

அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன்.   வில்லிசைக் கலைஞர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம்...

நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவும் சாத்தியம். சுகாதார அமைச்சு எச்சரிக்கை

காய்ச்சல் இருமல் தடிமண் அறிகுறிகளுடன் நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.    குறிப்பாக சிறு பிள்ளைகளிடையே பரவலாக இந்த நோய்த் தன்மை பரவுகின்றமை பதிவாகியுள்ளதாக அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்திய நிபுணர்...

ஆசியாவிலேயே மிக வயதான பெண் 117 வயதில் இலங்கையில் உயிரிழப்பு

ஆசியாவிலேயே மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். உக்கு அம்மா என அழைக்கப்பட்ட இவர் 1897 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி பிறந்த இவர் மாவனெல்ல,ஹேம்மாத்தகம பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு 7 பிள்ளைகளும் 98 பேரப்பிள்ளைகளும்...

யாழ். ஏழாலை தெற்கில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் பூங்கா (படங்கள்)

யாழ். ஏழாலை தெற்கைச் சேர்ந்த புலம்பெயர் நாட்டில் வசித்த க.தருண் என்ற சிறுவனின் ஞாபகார்த்தமாகச் சிறுவர் பூங்கா ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேற்படி சிறுவர் பூங்காவின் அண்மையில் இடம்பெற்ற போது வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சூராவத்தை அம்மன் ஆலயப் பிரதம குரு ஆகியோர் இணைந்து மேற்படி பூங்காவைச்...

கச்சாய் தெற்கில் திருடர்கள் கத்திக்குத்து கணவன் மனைவி காயம்

கச்சாய் தெற்கில்  இடம்பெற்ற திருட்டு முயற்சி ஒன்றின் போது முதியவர்களான கணவன் மனைவி ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகினர்.  இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் கச்சாய் தெற்குப் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.   சம்பவத்தில் அம்பலவாணர் வேலுப்பிள்ளை (வயது 71) அவரது மனைவியான...

உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும்

நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. “சுற்றுச்சூழலை பாதுகாக்க குரலை உயர்த்துங்கள்; கடல் நீர்மட்டத்தை உயர்த்தாதீர்கள்’ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. நமது வருங்கால சந்ததியினர் நலமாக வாழவேண்டும்...

<< 257 | 258 | 259 | 260 | 261 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

பிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்த ஆபத்து

பிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...

பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...

கை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...

கனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...

கொனோரா வைரசின் தாக்கம்!! உலகையே உலுக்கிவரும் புகைப்படம்

கொனோரா வைரசின் தாக்கம்!!  உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு ? சிவராத்திர சிறப்பு

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...

புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....

குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...

இன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019

மேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....

இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...

இன்றைய இராசிபலன்கள் (18.10.2019)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

இன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

1 | 2 | 3 | 4 | 5 >>