நாடகம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை தாக்கிய கணவர்.

 நாடகம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை தாக்கிய கணவர்.

சாவகச்சேரிப் பகுதியில் தொலைக்காட்சி நாடகம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி தலையில் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

தனது குழந்தைக்கு உணவு கொடுக்காது தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட கருத்து மோதல் பின்னர் மனைவி மீது தாக்குதலின் பின் முடிந்துள்ளது.

இதே வேளை தனது அக்கா தலையில் காயமடைந்ததால் கோபம் கொண்ட தம்பி சாவகச்சேரிப் பொலிசாரிடம் முறையிடச் சென்றதாகவும் பின்னர் அவனை மனைவியின் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவருகின்றது. நேற்று இரவு சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. யாழ் செயலகத்தில் குறித்த கணவர் வேலை செய்வதாகவும் மனைவியும் அரசாங்க உத்தியோகத்தர் எனவும் அப் பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன