பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை

 பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைபெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 
குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், காங்கேசன்துறை வரையான மாத்தறை திருகோணமலை பொத்துவில் மட்டக்களப்பு அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் இடி காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவம் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
 
 
அத்துடன் பெரும்பாலான கடலோரங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவும். வடமேற்கு கரையோரமாக மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும் காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் சில நேரங்களில் இக்காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
 
வடக்கு தெற்கு வான்நிலைகளில் நிலவிவரும் முகில் கூட்டங்களால் திடீரென காற்று வீசக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாகவும் காற்றின் வேகம் 50 - 60 கிலோமீற்றர் வேகத்துக்கு அதிகரிக்ககூடுமெனவும் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்