நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 25000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 25000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை இன்று தற்காலிகமாக குறைவடையலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக காலி வரையான கடலோரங்களிலும் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம்
தெரிவிக்கின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக 25000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்படுவதால் தேசிய கட்டட ஆய்வு நிலையம் விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன் மன்னார், புத்தளம் மற்றும் பொலன்னறுவை , மட்டக்களப்பு வீதிகளில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு , திருகோணமலை தவிர்ந்த மற்றைய அனைத்து ரயில் போக்குவரத்துக்களுக்கும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

வௌ்ளநிலைமை காரணமாக நேற்று இரவு சில ரயில் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.