நாட்டில் நிலவுகின்ற மோசமான காலநிலையால் சிவப்பு அறிவித்தல்

நாட்டில்  நிலவுகின்ற மோசமான காலநிலையால் சிவப்பு அறிவித்தல்

நாட்டில் நிலவுகின்ற மிக மோசமான காலநிலையை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

 
புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரை கரையோரபகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
 
இதேவேளை, மலையகத்துக்கான ரயில் சேவைகள் முற்று முழுதாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.அத்துடன், மட்டக்களப்புக்கான ரயில்சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 
கொழும்பு-குருணாகல் வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையால் இல-5, இல-06 வீதிகளின் ஊடாக போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவுக்கான நுழைவாயில்கள் யாவும் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 
நுழைவாயில்களை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவையடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.