நாளை முழுமையான சந்திரகிரகணம்

நாளை முழுமையான சந்திரகிரகணம்

சூரியன் மற்றும் சந்திரனுக்கு மத்தியில் பூமி நகர்ந்து வரும் வேளையில் சூரியன் மற்றும் சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அவற்றின் ஒளிக்கதிர்கள் பூமியின் மீது விழாமல் மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது.

சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கும் நிகழ்வு முழு சந்திர கிரகணம் எனப்படுகின்றது.

இத்தகைய முழு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது.

கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 02.31க்கு ஆரம்பமாகவுள்ளதோடு, இரவு 08.29க்கு நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை சந்திர கிரகணத்தின் பெரும் பகுதி பகல்வேளையில் நிகழும் எனினும், பகுதியளவிலான சந்திர கிரகணத்தை பார்வையிடும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது.

இதே​வேளை, முழுமையான கிரகணம், வட அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதியிலுள்ள மக்களுக்கு காணக்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.