நீரில் மயங்கி விழுந்து குருநகரைச் சேர்ந்தவர் மரணம்

இழுவை வலை பயன்படுத்திக் கடற்கரையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் இயலாமையினால் மயங்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 
பூநகரி பள்ளிக்குடாவில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்.குருநகரைச் சேர்ந்த அகஸ்ரின் அந்தோனிப்பிள்ளை (வயது 68) என்பவரே உயிரிழந்தார்.
 
அவர் சக மீனவர்களுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் படகில் ஏறி பள்ளிக்குடாவைச் சென்றடைந்தார். 
 
அங்கு அவர் கடற்கரையில் சுமார் 3 அடி ஆளத்தில் நின்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் தனக்கு இயலாமலுள்ளதாகச் சக தொழிலாளளர்களுக்குக் கூறியுள்ளார்.
 
இதனால் மீன் பிடிக்காது ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளனர். அதனால் அவர் வலை இழுக்காது நின்றுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் பார்த்தபோது அவர் எந்த உணர்வுமின்றிக் கடலில் மிதந்துள்ளார் என்று சக தொழிலாளர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
 
அவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு 6 பிள்ளைகள். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.