பண்டத்தரிப்பு பகுதியில் கிணற்றிலிருந்து ஆறு வயது சிறுவனின் சடலம் மீட்பு

பண்டத்தரிப்பு பகுதியில் கிணற்றிலிருந்து ஆறு வயது சிறுவனின் சடலம் மீட்பு

பண்டத்தரிப்பு பகுதியில் முன்பள்ளி சென்ற ஆறு வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான்.

குறித்த பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி கிரேசியன் (வயது 6)  வீட்டிற்கு அருகாமையில் உள்ள முன்பள்ளிக்குச் சென்றுள்ளார். மதியம் 12 மணியான போதும் பிள்ளை வீடு திரும்பாத நிலையில்  பெற்றோர்கள் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை முன்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக கண்டுபிடிக்கப்படுள்ளான்.

அதனை தொடர்ந்து பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளிற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைத்துள்ளதுடன். சிறுவன் தவறி விழுந்தான அல்லது கொலை செய்யும் நோக்கில் தள்ளி விளுத்தப்பட்டான  என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்