பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ வீதியுலாவந்த நல்லூர்கந்தன் தேர் (படங்கள் காணொளி)

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ வீதியுலாவந்த நல்லூர்கந்தன் தேர் (படங்கள் காணொளி)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

 லட்சணக்கணக்கான பக்தர்களின் அரேகரா கோஷத்தின் மத்தியில் நல்லூர் கந்தன் தேரில் வீதியுலா வந்தார்.

அதிகாலை நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணியளவில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அச்சமயம் லேசான மழைத்தூறல் துறியமை பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து தேர் வீதியுலா வந்து காலை 9.15 மணிக்கு இருப்பிடத்தை அடைந்தது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு பெருந்தொகையாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தொலை தூரங்களில் இருந்து வந்த பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்யும் பொருட்டு வகை வகையான காவடிகள், பாற்செம்பு, கற்பூரச் சட்டிகளை ஏந்திவந்த காட்சிகள் வீதியெங்கும் பரவசமாக இருந்தன. கந்தனின் தேருலாக் காட்சியைக் காண வந்த பக்தர்களுக்கு தாக சாந்தியை பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அடியவர்கள் வழங்கினர்.