பளையில் மினிபஸ் – மோட்டார் சைக்கிள் கோர விபத்து ஒருவர் பலி

பளையில் மினிபஸ் – மோட்டார் சைக்கிள் கோர விபத்து ஒருவர் பலி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதியதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பளை நகரப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் பளைப் பிரதேச சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகராஜா (வயது 56) என்பவரே மரணமானார்.

சாவகச்சேரியில் சேர்க்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமானார்.

மினி பஸ்ஸின் சாரதியைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.