பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா?

பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா?

தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.. இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல.

பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந்த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப் பட்டவை. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை சோளப்பொரியின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் பிற வேதிப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட சோளப்பொரி மேலும் மோசமான விளைவுகளைத் தருபவை.
சின்னப் பசங்க தியேட்டர்ல கேக்கிற முதல் ஐயிட்டமே இந்த பாப்கார்ன் தான்.. அதுவும் சில பேரு அடம்பிடிச்சு பட்டர் பாப்கார்ன் தான் வேனும்னு சொல்வாங்க. ஆனா இதுல சேர்க்கற வெண்ணைய் எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் பார்த்தோமுன்னா பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கறதையே விட்டுடத்தோணும்.

பெரும்பாலான தனியார் வெண்ணைய் தயாரிப்பு நிறுவனங்கள் அசல் பாலில் தான் வெண்ணையை பிரித்தெடுத்து நமக்கு வழங்குகின்றார்கள் என நாம் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தால் நாம் உண்மையிலேயே ஏமாளிகள் தான். நமக்கு வருகின்ற பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் வெண்ணைய் பாக்கெட்டுகள் Margarine எனப்படும் செயற்கை வெண்ணெய் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு சின்ன பரிசோதனையைக் கொண்டு நாம் வாங்கியது ஒரிஜினல் பட்டரா அல்லது Margarine பட்டரா என்பதை தெரிந்து கொள்ளமுடியும் . ஒரிஜினல் பட்டர் என்றால் அது கீழே சிந்தினால் உடனே எரும்புகள் வந்து மொய்க்கும். இந்த செயற்கை பட்டரில் எரும்புகள் மொய்க்காது.. எரும்புக்கு தெரிந்தது கூட நமக்குக் தெரியவில்லையே..

பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு பதிலாக மார்க்ரைன் எனப்படும் செயற்கை வெண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது ஆகும். இது உடலில் கொழுப்பு அளவுகளை கணிசமாக அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது.
பிரபல நிறுவனங்கள் கூட பட்டர் பிஸ்கெட் தயாரிக்கும்போது இந்த Margarine கொழுப்பைத்தான் பயன்படுத்துகின்றன என்பது கூடுதல் அதிர்ச்சித் தகவல். குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது நாளடைவில் இந்த கொழுப்பானது உடலில் படர்ந்து கேன்சர் செல்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்புண்டு சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்த Margraine கொழுப்பினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு எல்.டி.எல். கொழுப்பானது உடலில் அதிகமாகச் சேர்ந்து இரத்த நாளங்களில் படிந்து அளவுக்கு அதிகமான எடை மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களை இந்த செயற்கை வெண்ணைய் நமக்கு பரிசாகத் தருகின்றது.. இதய நாளங்களில் இது படிவதால் இரத்தம் சீராக செல்வது கொஞ்சம் கொஞ்சமாக தடை படுகிறது..
இப்போது இந்தியச் சந்தையில் பெரும்பாலும் மரபணுமாற்றம் செய்யப் பட்ட உணவுப் பொருட்கள், செயற்கையாக இரசாயணம் கலந்து தயாரிக்கும் உணவுப்பொருட்கள் எவ்வித கட்டுபாடுமின்றி தாராளமாக புழக்த்தில் விடப்பட்டுவிட்டன. இவற்றை நாம் நம்மையறியாமலேயே வாங்கி உண்கின்றோம். கூடுமானவரை இந்த டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் இப்படி இயற்கைக்கு மாறாக செயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்த்தாலே பல இனம் புரியாத நோய்கள் நம்மை தாக்குவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும்.