பிரான்ஸில் யாழ். இளைஞன் மர்மமான முறையில் மரணம்

பிரான்ஸில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாசலிங்கம் வருண்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவர் 8 வருடங்களாக பிரான்ஸில் தொழில்புரிந்த நிலையில் திங்கட்கிழமை இரவு வேலை முடிந்து அறைக்குச் சென்றுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரவில்லையென்பதுடன் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை நடைபெறவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது