பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் பலி

பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் பலி

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து சென்ற பிரித்தானியாவில் புகலிடம் கோரிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

43 வயதான ஜெயரட்னம் கந்தையா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்று 14 வருடங்கள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.