புங்குடுதீவில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் பரிதாபச் மரணம

புங்குடுதீவில்  கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் பரிதாபச் மரணம

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது- 09) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோது தவறி வீழ்ந்துள்ளான் என்றும்,

சிறுவனை நீண்டநேரமாகக் காணாத உறவினர்கள், தேடியபோது சிறுவன் நீரில் மூழ்கியமை தெரியவந்தது என்றும்,

இதுகுறித்து தமக்கு தெரியப்படுத்தப்பட்தை அடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.