கோண்டாவிலில் மண்ணெண்ணெய் குடித்த குழந்தை வைத்தியசாலையில்

கோண்டாவிலில் மண்ணெண்ணெய் குடித்த குழந்தை வைத்தியசாலையில்

புட்டிப்பால் என்று கருதி மண் ணெண்ணெயை அருந்திய குழந்தை சிகிச்சைக்காக

யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோண்டாவிலைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய குழந்தையே மண்ணெண்ணெய் அருந்தியுள்ளார். நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தாயார் புட்டிப் பால் தயாரித்துக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரமாக மண்ணெண்ணைப் போத்தல் ஒன்று இருந்துள்ளது. அதனைப் புட்டிப் பால் என்று கருதி குழந்தை எடுத்து அருந்தியுள்ளது. அதனைக் கண்ட தாயார் உடனடியாக அவரை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார். குழந்தை தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க் கப்பட்டுள்ளது.