புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும். எல்லோரும் எதிர்பார்த்து இருப்பது இந்த உத்தராயணம் எனச் சொல்லக் கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும். மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்கக்கூடிய அயண மாதங்களாகும்.

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாதப் பிறப்பு தர்ப்பணமும். இது இரண்டும் எப்போதும் சேர்ந்து வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாதப் பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது உண்டு.


 

பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானை வைத்துப் பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும். தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி நேரத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மகர என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையைக் குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைபிடித்த நேரங்களை நாமும் கடைபிடித்தால் நன்மை கிட்டும். இந்தாண்டு தை 1ம் திகதி (15.01.2020) புதன் கிழமை மாதப் பிறப்பு ஏற்படுகிறது.

எப்போது புதுப்பானை வைத்து பொங்கல் வைக்கலாம்?

தை 1ம் திகதி (15.01.2020) புதன் கிழமை அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சூரிய ஹோரையில், அல்லது 11.00 முதல் 12.00 மணிக்கு குரு ஹோரையில் பொங்கல் வைக்கலாம்.

உத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனை அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாதப் பிறப்பு பிதுர் தர்ப்பணத்தைச் செய்யலாம்.

ஆன்மீக செய்திகள் 14.01.2020

ஆன்மீகச்செய்திகள்

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு ? சிவராத்திர சிறப்பு

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...

புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....

குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...

இன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019

மேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....

இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...

இன்றைய இராசிபலன்கள் (18.10.2019)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

இன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

வவுனியாவில் கோரவிபத்து! 3 பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தாயொருவர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற தாய் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் இந்த விபத்தில் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்த...

தூக்கில் தொங்கி யாழ் மத்தியகல்லுாரி மாணவன் தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தர மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த சிவகுமார் டினோஜன் (19) என்ற மாணவனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்று வருகிறார்.நேற்று மாலை மாணவன்...

தெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய நோயாளி

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் கட்டாரில் தொழில் புரிந்து வந்தவருமான நபரொருவர் கடும் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகித்த வைத்தியர்கள் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை அவர்...

யாழில் வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் பலியான உயிர்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் அலட்சியப் போக்காலும் கடமையினை முறையாக மேற்கொள்ளாமையினாலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.இது தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்..போன உயிர் என்றைக்குமே திரும்பி வரப் போறதில்லை. ஆனால் மீண்டும் ஒரு...

யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து நாளை முதல் விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையிலான உள்நாட்டு விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.இந்த நடவடிக்கையை பிட் எயார் விமான சேவை நிறுவனம் எடுத்துள்ளது.கொழும்பு இரத்மலானையில் இருந்து தினமும் காலை 7.30 மணிக்கு புறப்படும் இவ்விமானம் காலை 8.20 மணிக்கு...

யாழ் மண்ணின் மார்தட்டும்! வரலாற்று பதிவு?

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" திறந்து வைக்கப்பட்டுள்ளது.யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்...

யாழ்- ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர்கள் கைது

யாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கசிப்பு ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த இடம்...

யாழில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. இங்கு உற்பத்தி...

யாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்

வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>