புத்தூர் பகுதியில் திருடிய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில்

புத்தூர் பகுதியில் திருடிய சிறுவன்   நன்னடத்தை பாடசாலையில்

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனை, சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைப்பதுடன் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனுக்காக ஊரவர்களுடன் மோதிய உறவினர்கள் இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, வியாழக்கிழமை(26) உத்தரவிட்டார்.

புத்தூர் கலைமதி பகுதியிலுள்ள வீடுகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனை, அப்பகுதி மக்கள்; பிடித்து சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைத்து திருட்டில் சிறுவன் ஈடுபடுகின்றான் என்பதை எடுத்துக்கூறினர்.

சிறுவனை அழைத்துவந்தவர்கள் வந்தவர்கள் தெரிவிப்பதை செவிமடுக்காத சிறுவனின் உறவினர்கள், சிறுவன் திருடவில்லையெனவும் பொய்க்குற்றச்சாட்டுக்கு கூறுவதாக கூறியும், சிறுவனை பிடித்துக்கொண்டு வந்தவர்களை   தாக்கினார்கள்

தாக்குதலுக்குள்ளானவர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சிறுவனையும் தாக்கியவர்களையும் பொலிஸார்  புதன்கிழமை(25) கைது செய்தனர்.