சிறுப்பிட்டி பூமகள் கற்கை்மையத்தின் 2வது வருட விளையாட்டு விழா(படங்கள் இணைப்பு)

சிறுப்பிட்டி பூமகள் கற்கை்மையத்தின் 2வது வருட விளையாட்டு விழா(படங்கள் இணைப்பு)

பூமகள் கற்கை மையத்தின் விளையாட்டு விழா மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் பிற்போடப்பட்டு பின்னர் ஒகஸ்ட் மாதம் பத்தாம் திகதி நடத்துவதாகத் திட்டமிடப்பட்டு, 31/07/14 பெற்றோர்களுடன் ஒன்றுகூடல் நடாத்தப்பட்டு, பெற்றோரினதும் ஆசிரியைகளினதும் மற்றும் ஊர் நலன் விரும்பிகளினது ஒத்துழைப்புடனும் புதிய மைதானம் தயார்செய்யப்பட்டு விளையாட்டு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கோப்பாய்க் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு ஏ. எஸ். சற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் வலய முன்பள்ளி உதவிக்  கல்விப்பணிப்பாளர் திரு.கே.விமலநாதன், புத்தூர் ஆரம்பப் பள்ளி முதல்வர் திரு.இ.கோகுலராகவன், சிறுப்பிட்டி மேற்கு கிராம அலுவலர் திரு.தி.வரதராஜன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாகக் கோப்பாய் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் செல்வி. த.ஸ்ரீதேவி, கோப்பாய் கோட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி செல்வி பா.மகேஸ்வரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் யாழ் வலய முன்பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் பலரும் வருகை தந்திருந்தனர்.

மேற்படி விருந்தினர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துவரப்பட்டு முன்பள்ளி மாணவர்கள் தேவாரமிசைக்க மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து பூமகள் நற்பணி மன்ற இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியினை பிரதமவிருந்தினர் ஏற்றி வைத்தார்.

வரவேற்புரையினை திரு ரஞ்சித் அவர்கள் தமிழிலும், முன்பள்ளி மாணவன் பொ.செங்கோ ஆங்கிலத்திலும் வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து நாமகள் இல்லம் மற்றும் பூமகள் இல்லங்களுக்கிடையிலான போட்டிகள் ஆரம்பமாகின. முன்பள்ளி ஆசிரியைகள் யசிந்தா கீர்த்திகா ஆகியோர் மாணவர்களை நெறிப்படுத்தி விளையாட்டு விழா சிறப்புடன் நடைபெற முன்னின்று உழைத்தனர்.

இவ் விளையாட்டு நிகழ்வில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்காக