பூமகள் கற்கை மையம்- பூமகள் முன்பள்ளி 2ஆம் ஆண்டு நிறைவு விழா அறிக்கை.

பூமகள் கற்கை மையம்- பூமகள் முன்பள்ளி 2ஆம் ஆண்டு நிறைவு விழா அறிக்கை.

பூமகள் கற்கை மையம்- பூமகள் முன்பள்ளி இரண்டாம் ஆண்டு நிறைவு விழா அறிக்கை.


 பூமகள் நற்பணி மன்றம் நடாத்தும் பூமகள் கற்கை மையம்- பூமகள் முன்பள்ளி இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவானது 08-02-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பூமகள் கற்கை மைய வளாகத்தில் சிறுப்பிட்டி மேற்கு பூமகள் நற்பணி மன்றத் தலைவர் திரு.கோ.ஸ்ரீஸ்கந்தராஜாவின் தலைமையில், சிறுப்பிட்டி மேற்கு பூமகள் நற்பணி மன்ற உறுப்பினர் திரு.செ.கந்தையாவின் நெறிப்படுத்தலில் கோலாகலமாக முன்பள்ளி மாணவர்கள் விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதனை தொடந்து முன்பள்ளி மாணவர்களான த.பிரவீன்,சி.ஹபிஷன்,ப.சஸ்மிகா, டி.ஹரிஷ்ணவி ஆகியோரால் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. அதனை அடுத்து பிரதம விருந்தினர் திரு.க.துரைராஜா அவர்கள் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சிப் பொருட்களை நாடா வெட்டித் திறந்து வைத்தார். பின்னர் சிறுப்பிட்டி மேற்கு பூமகள் நற்பணி மன்ற உறுப்பினர் திரு.இ.றஞ்சித் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 தொடந்து சிறுப்பிட்டி மேற்கு பூமகள் நற்பணி மன்ற தலைவர் திரு.கோ.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமை உரை நிகழ்த்தினார். அடுத்து முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது. அதில் முதலாவது நிகழ்வாக குழுநடனம் இடம்பெற்றது. அதன் பின்னர் முன்பள்ளி ஆசிரியரான செல்வி க.ஜஷிந்தா முன்பள்ளியின் வளர்ச்சி பற்றியும் மாற்றங்கள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து காவடி இடம்பெற்றது. அடுத்து திரு.ஆ.கனகசிங்கம் அவர்கள் உரை நிகழ்த்தினார். பின்னர் குடம்நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து எமது கிராம அலுவலர் திரு.தி.வரதராஜன் அவர்கள் உரையாற்றினார்.

அதனை அடுத்து ஆங்கிலப்பாடலிற்கு அபிநயநடனம்இடம்பெற்றது. பின்னர் எமது பிரித்தானியா பூமகள் நற்பணிமன்றச் செயலாளர் திரு.நா.சத்தியவரதன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதனை அடுத்து கரகாட்டம் இடம்பெற்றது. தொடந்து ஓய்வுபெற்ற தபாலதிபர் திரு.த. இராசலிங்கம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அடுத்து திரு.அ.சபாரத்தினம் அவர்கள் உரை நிகழ்த்தினார். பின்னர் மாம்பழம் நடனம் இடம்பெற்றது. தொடந்து பிரதம விருந்தினர் திரு.க.துரைராஜா அவர்கள் உரையாற்றினார்.அடுத்து வேப்பிலை நடனம் இடம்பெற்றது. அதனை அடுத்து பூமகள் முன்பள்ளியின் பழைய மாணவி செல்வி.ற.ஜஸ்மினியின் My School பேச்சு இடம்பெற்றது. பின்னர் பூமகள் முன்பள்ளியின் பழைய மாணவி செல்வி.ஜ.துளசிகாவின் தனி நடனம் இடம்பெற்றது.

 அதனை தொடந்து சிறுப்பிட்டி மேற்கு பூமகள் நற்பணிமன்ற செயலாளர் திரு.வே. தர்மலிங்கம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். அதன் பின்னர் இறுதியாக முன்பள்ளி மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து குழுநடனம் நிகழ்த்தினர். அத்துடன் மாலை 6.00 மணியளவில் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவேறியது.                                                                                                                                                                                                நன்றி.

 படங்கள் பார்வையிட