போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்

 போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்

வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய  நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்

நல்லிணக்க புரத்தில் உள்ள இரு  மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர். அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்)  பெற்று வந்துள்ளார்.

அதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர் அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.


பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த மாத்திரைகள்  அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

அவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்ட புரத்துக்கு அண்மையில் உள்ள  குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர். குறித்த விடயம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

செய்திகள் 11.01.2019

செய்திகள்

யாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்

இன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...

முல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து

முல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...

பெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...?

எரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...

இலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்!

இலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்

 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...

யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்

யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...

யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்

யாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...

நாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது

உலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...

வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்

சுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

1 | 2 | 3 | 4 >>