போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்

 போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்

வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய  நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்

நல்லிணக்க புரத்தில் உள்ள இரு  மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர். அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்)  பெற்று வந்துள்ளார்.

அதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர் அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.


பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த மாத்திரைகள்  அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

அவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்ட புரத்துக்கு அண்மையில் உள்ள  குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர். குறித்த விடயம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

செய்திகள் 11.01.2019

செய்திகள்

உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் புகைப்பொருட்கள் தடை.

புகைத்தல் ஒழிப்பு தினத்தில் புகைத்தல் பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்க தீர்மாணித்துள்ளதாக யாழ்.மருத்துவ சங்க செயலாளர் வைத்திய கலாநிதி சுரேந்திரகுமார் தெரிவித்தார்    உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

யாழில் எதிர்வரும் 31. புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

 'புகையிலை ஒழிப்பு' எனும் தொனிப் பொருளில் மாபெரும் பேரணி ஒன்றினை யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் மருத்துவ விஞ்ஞானப் பிரிவும் யாழ்.பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ துறையுடன் இணைந்து எதிர்வரும் 31 திகதி அன்று நடாத்த உள்ளது.     இப் பேரணியானது சர்வதேச...

முல்லைத்தீவு.புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி சிறுமி மரணம்! தாய் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சிவநகர் நகரில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி சிறுமி ஒருவர் மரணமடைந்ததுடன், தாய் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தமிழரசன் உதயகுமாரி (வயது 06)  என்ற சிறுமியே இவ்வாறு மின்னல்...

யாழில் இருகுழுக்களுக்கிடையில் மோதல் நால்வர் காயம்

யாழ் துன்னாலைப்பகுதியில் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் நால்வர் காயடைந்துள்ளார்கள். யாழ்.துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக் களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாய மடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில்...

யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை நேற்றுமுதல் காணவில்லை

யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப்...

கொடிகாமம் கோயில் மண்டபத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கொடிகாமம் கட்டபறிச்சான் பிள்ளையார் கோயில் முன்மண்டபத்தில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோயிலுக்கு பூசைக்கு சென்ற பூசகர் சடலம் கிடப்பதை அவதானித்து அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சடலத்தை மீட்கப் பொலிஸார் நடவடிக்கை...

வெளிநாட்டில் இலங்கை இளநீருக்கு கிராக்கி

சர்வதேச சந்தையில் தற்போது இலங்கையின் இளநீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளிலும் இலங்கையின் இளநீருக்கு கேள்வி அதிகரித்துள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.    இலங்கையிலிருந்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அதிகளவில்...

ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை கொலை செய்ய முயற்சித்த தாய்க்கு சிறைத்தண்டனை

ஐஸ்கீறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐஸகிறீம் கேட்டு அழுது அடம்பிடித்த மகனை களுகங்கையில் வீசி கொலை செய்ய குறித்த பெண் முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு களுத்துறை...

தாயின் சங்கிலியை அடைவு வைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த யாழ் மாணவன்

தனது தாயின் சங்கிலியை அடைவு வைத்து தனது நண்பர்களுக்கு பிரபல விடுதியில் மது விருந்து கொடுத்துள்ளான் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன். 2016ல் க.பொ.த. உயர்தரப்பரீட்சை  எடுக்கும் 17 வயது மாணவனே நேற்று இந்தத் திருவிளையாடல் புரிந்துள்ளார். தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி...

நாடகம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை தாக்கிய கணவர்.

சாவகச்சேரிப் பகுதியில் தொலைக்காட்சி நாடகம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கணவன் தாக்கியதில் மனைவி தலையில் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.  தனது குழந்தைக்கு உணவு கொடுக்காது தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட கருத்து மோதல் பின்னர்...

<< 252 | 253 | 254 | 255 | 256 >>

வெளிநாட்டுச்செய்திகள்

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது

உலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...

வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்

சுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி

யாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.    செல்போர்ண் வீதியில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

1 | 2 | 3 | 4 >>