மகளுக்கு தங்க கழிப்பறையை பரிசளித்த மன்னர்

மகளுக்கு தங்க கழிப்பறையை பரிசளித்த மன்னர்

உலகிலேயே முதன் முறையாக மணப் பெண்ணின் திருமண ஆடைக்காக 30,00,000 டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது. சௌதி மன்னர் அப்துல்லா இபின் அப்துல்லாசிஸ் மகளின் திருமணத்திற்குதான் இந்த செலவு.

இந்த பணம், இந்திய பண மதிப்பு படி 180 கோடி ரூபாய். (ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டிற்கான செலவு)

ஆடைகள் முழுவதும் தங்கம் நிறைந்திருக்கிறது. மிகவும் வித்யாசமாக பிரமிடு வடிவத்தில் ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆடைகள் முழுவதும் தங்கம் நிறைந்திருக்கிறது மகாராணி நடந்து செல்லும் பாதையில் பின் தொடர்ந்து உதிரும் தங்கங்களை சேகரித்தாலே பணக்காரனாகி விடலாம்.

மேலும், தனது மகளுக்கு தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிப்பறையையும் பரிசளித்துள்ளார்.

சௌதியின் கலாச்சாரத்தின்படி பெண்களுக்கு தங்க நகைகளை பரிசளிப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக அவர்களின் திருமணத்தின் போது, நம் நாட்டைப் போல மனமகள் வீட்டார் மட்டுமில்லாமல் மனமகன் வீட்டார், உற்றார் உறவினர், நண்பர்களும் பரிசளிப்பார்கள்.

இந்நிலையில், சௌதி மன்னர் தன் மகளுக்கு வேறு யாரும் இதுவரை அளித்திராத பரிசினை தன் அன்பின் அடையாளமாக கொடுக்க விரும்பினார். அதற்காக அவர் தேர்ந்தடுத்த பரிசு தங்கக் கழிப்பறை.

தன் அன்பு மகளின் நிக்காவிற்கு தன் சொத்தின் பெரும்பகுதியை செலவு செய்து முழுக்க, முழுக்க தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிப்பறையை பரிசளித்து ஆச்சரியப் படுத்தியிருக்கிறார் சௌதி மன்னர்.

போர்ப்ஸ் பத்திரிகையின்படி அப்துல்லாசிஸின் சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர். உலகின் செல்வாக்கு மிக்க 500 இஸ்லாமியர்களின் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்.