மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இதுதென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 


இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது.


அம்பாளின் ஆலயம் 1750 ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன.


ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளிளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர்.


முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வ்ந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.


காரணப் பெயர்


இவ் ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத் தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.



நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச் சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக் கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக் கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை ""நாளைய தினம் பன்றி எச்சங்களை புதைத்தேன் என்று கூறு என்று அருள்புரிந்தாள். என்ன அதிசயம்! அடுத்த நாள் மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலை காணப்பட்டது. அதைக் கண்ட பக்தன் ஆடிப் பாடி கைகூப்பி, மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்க, வாய் குழறியபடி பன்றித் தலைச்சி என்று பக்தியோடு பல முறை பணிந்தான்.


தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது "கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.


அமைவிடம்


தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி நகரில் இருந்து புத்தூர் வீதியில் சுமார் 3 மைல் தொலைவில் உள்ள தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஒன்றான மட்டுவிலில் இக்கோவில் அமைந்துள்ளது.


ஆலய வளர்ச்சி


இன்று நாம் காணும் இடத்தில் இந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிஷகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றன. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.


திருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூஜை நடைபெறும்.
நித்திய பூசை ஆயத்தமணி 5.30 1. உஷத் காலம் 6 மணி 2. கால சந்தி 9 மணி 3. உச்சி காலம் 12 மணி 4. சாயரட்சை 3 மணி 5. இரண்டாம் காலம் 4 மணி 6. அர்த்தசாமம் 5 மணிபன்றித்தலைச்சி என்ற சொற்றொடரோடு பங்குனித் திங்களும் சேர்ந்து வரும். யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே நீவேதித்து வணங்குவார்கள். பொங்கற் தலமாகவும், தீர்த்த சிறப்பும், முர்த்திப் பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

வரலாறும்,நினவும் 04.01.2019

செய்திகள்

இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உயர்வடைந்துவரும் வெப்பநிலைக் காரணமாக இன்று சில பகுதிகளுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.அதற்கமைய புத்தளம், மன்னார், மொனராகலை மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை மேல்,சப்ரகமுவ, மத்திய...

வவுனியாவில் சிகரெட் பாவனைக்கு தடை: பிரதேச சபை அதிரடி

வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்ய வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர்...

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வரும் தடை

கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபையின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் பெறுதல் மற்றும் வழங்குதல் தடை செய்யப்படவுள்ளது.இந்த தடையானது எதிர்வரும் 01.04.2019ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம்...

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பிரான்ஸ் 24 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்யை தினம் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல்...

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.வீடு புகுந்து கொள்ளையிட்டமை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.தெல்லிப்பளை வீமன் காமம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனையே தெல்லிப்பளை பொலிஸார் நேற்று கைது...

யாழ். இந்துக் கல்லூரியில் சிறந்த விஞ்ஞானிகள் உருவாகுவார்கள்: பேராசிரியர்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் பலர் எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாகுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டப்பின் கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ஜி. மிகுந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகள் அபிவிருத்திப் பிரிவினரின்...

வடக்கு பாடசாலைகளில் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம்

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வும்,பிரயோகப் பரீட்சையும் நாளை வியாழக்கிழமை(21) முதல் இடம்பெறுமென வடமாகாணக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் மூன்றாம் வகுப்பு 1(அ) தரப் பிரிவுக்கு விஞ்ஞானத்...

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21)மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்....

யாழில் காரில் சென்றவரை வழி மறித்து வாள் வெட்டு

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் காரில் சென்றவரை வழிமறித்த குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது.இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

இலங்கையின் ஒரு பகுதியில் பெய்த ஆழங்கட்டி மழை

இலங்கையின் மலையக பகுதியில் ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதிகளில் பல பகுதிகளுக்கு நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பொகவந்தலாவை, நோர்வுட் மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அடைமழை பெய்துள்ளது.இதன்போது பல இடங்களில் அடைமழையின்...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

சீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி

சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால்...

சுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம

சுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் ஒன்று இருந்துள்ளது.இதனால்...

கனடாவில் காணாமல் போயுள்ள தமிழர்

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50...

கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தேடுதல் நிறுவனமான கூகுள் தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது...

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன 12 வயது சிறுமி

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார் நாடியுள்ளனர்.சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள...

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண்...

இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் . மாணவர்கள் போராட்டம்

இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்திய உட்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும்  இளையதலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி தங்கள்...

கனடா வாழ் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

கனடா நாட்டின் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கற்கள் மற்றும் அணிகலன்கள் என்பன ஏலத்தில் விடப்படவுள்ளன.நாளைய தினம்(17ஆம் திகதி ) இந்த அரிய வாய்ப்பினை கனடா வாழ் மக்களுக்கு அந்நாட்டு வருவாய் துறையினர் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளனர்.நாளை பகல் 02.00 மணியளவில் குறித்த அணிகலன்கள்...

இலங்கை உட்பட பல நாடுகளில் முடங்கிய பேஸ்புக்!

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியாக பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு பேஸ்புக் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் இந்த பதிவு தரவவேற்றப்பட்டுள்ளது.இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல வென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு...

எத்தியோப்பிய விமான விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் கனடாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)

இன்று  திரு திருமதி  பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட  திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும்   உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...

பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன்   அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...

திருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019.    திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...

1 | 2 | 3 | 4 >>