மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இதுதென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 


இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது.


அம்பாளின் ஆலயம் 1750 ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன.


ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளிளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர்.


முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வ்ந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.


காரணப் பெயர்


இவ் ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத் தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.



நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச் சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக் கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக் கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை ""நாளைய தினம் பன்றி எச்சங்களை புதைத்தேன் என்று கூறு என்று அருள்புரிந்தாள். என்ன அதிசயம்! அடுத்த நாள் மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலை காணப்பட்டது. அதைக் கண்ட பக்தன் ஆடிப் பாடி கைகூப்பி, மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்க, வாய் குழறியபடி பன்றித் தலைச்சி என்று பக்தியோடு பல முறை பணிந்தான்.


தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது "கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.


அமைவிடம்


தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி நகரில் இருந்து புத்தூர் வீதியில் சுமார் 3 மைல் தொலைவில் உள்ள தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஒன்றான மட்டுவிலில் இக்கோவில் அமைந்துள்ளது.


ஆலய வளர்ச்சி


இன்று நாம் காணும் இடத்தில் இந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிஷகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றன. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.


திருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூஜை நடைபெறும்.
நித்திய பூசை ஆயத்தமணி 5.30 1. உஷத் காலம் 6 மணி 2. கால சந்தி 9 மணி 3. உச்சி காலம் 12 மணி 4. சாயரட்சை 3 மணி 5. இரண்டாம் காலம் 4 மணி 6. அர்த்தசாமம் 5 மணிபன்றித்தலைச்சி என்ற சொற்றொடரோடு பங்குனித் திங்களும் சேர்ந்து வரும். யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே நீவேதித்து வணங்குவார்கள். பொங்கற் தலமாகவும், தீர்த்த சிறப்பும், முர்த்திப் பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

வரலாறும்,நினவும் 04.01.2019

செய்திகள்

சுன்னாகம் நிலத்தடி மாசு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

யாழ்.சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் காரணமாக பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இருபது மில்லியன் ரூபா(இரண்டு கோடி )நஷ்டஈடு செலுத்த வேண்டுமென  உயர்நீதிமன்றம் இன்றைய தினம்(04) சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்த நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு அதிரடியாக...

கரவெட்டியில் கேபிள் ரீவிகளுக்கு தடை! பிரதேச சபை அதிரடி

மாணவர்களின் கல்வி பின்னடைவுக்கு கேபிள் ரீவிகளும் ஒரு காரணம் என்ற அடிப்படையில் இனி வடமராட்சி கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை கேபிள் ரீவிகளில் எவ்வித நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பக்கூடாது என்ற தீர்மானம் இன்று சபையில் நடைபெற்ற அமர்வின் போது...

அடிப்படை குடிநீர் வசதி இல்லா உலகளவில் 200 கோடி மக்கள்

தேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக,  உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள யுனிசெப் அமைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், குடிநீர் பற்றாக்குறையால்...

இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி!!

சித்திரைப் புத்தாண்டுக்கு மறுநாளான எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கூறியுள்ளார்.  இதேவேளை,இந்த...

யாழில் வறட்சியால் 7 ஆயிரத்து 311 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியின் தாக்கத்தால் யாழ்.மாவட்டத்தில் மட்டும் 7 ஆயிரத்து 311 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.வறட்சியால் யாழ்.மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்...

மட்டக்களப்பில் பட்டப்பகலில் எரித்து கொள்ளப்பட்ட நபர்!

மட்டக்களப்பு - வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் நபர் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான நபர் ஒருவரே...

யாழ். ஆனைக்கோட்டையில் உதயமான அபயம் இலவச மருத்துவ சேவை

சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில்...

வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு பிரஜாவுரிமை

வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்கா,பிரித்தானியா,கனடா,பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கே இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

வேலணையில் பாம்பு தீண்டி, தபால் உத்தியோகத்தர் மரணம்..!

வேலணையில் பாம்பு தீண்டி, புங்குடுதீவு தபால் உத்தியோகத்தர் மரணம்புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும் வேலணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சசிதரன் அவர்கள் அரவம் (பாம்பு) தீண்டி, அகால மரணமானார் எனத் தெரிய வருகிறது.புங்குடுதீவு தபால் அலுவலக உத்தியோகத்தரும், மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய...

அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் கிடைக்குமா?

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் இந்த நிலைமை...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

உலகச்செய்திகள்

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

பிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...

லண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது!

நான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...

இந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...

விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை

தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...

ஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்

ஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...

அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! இலங்கை தமிழர் காயம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்

சுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...

பிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...

பிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்

பிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>