மனைவி தற்கொலை! கேள்வியுற்ற கணவர் உயிரை விட முயற்சி

மனைவி தற்கொலை! கேள்வியுற்ற கணவர் உயிரை விட முயற்சி

தனது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதைக் கேள்வியுற்ற, பொலிஸ் காவலில் இருந்த கணவர் அங்கிருந்த போத்தலை உடைத்து தன்னை தானே குத்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

கடந்த எட்டு மாதங்களுக்க முன்னர் இளவாலை, பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணுக்கும் வவுனியா நெழுக்குளத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் இளவாலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் மனைவியின் நகையை அடைவு வைத்தமை தொடர்பில் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாமியார் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மருமகன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த நபரின் மனைவி இன்று காலை தூக்கிட்டு மரணம் அடைந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருந்த மருமகனுக்கு அவரது மனைவி இறந்துவிட்டர் என்பதை மாமியார் தெரிவிக்கவே அவர் தன்னைத்தானே போத்தலால் தாக்கியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுபாகரன் சுமதி (வயது 24 )என்பவரே தற்கொலை செய்துள்ளார். இவருடைய கணவரான சிவபாதம் சுபாகரன்(வயது 23) என்பவரே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.