மர்மப் பொருள் வெடித்ததில் பாதத்தை இழந்த இளைஞன்.

மர்மப் பொருள் வெடித்ததில் பாதத்தை இழந்த இளைஞன்.

யாழ். எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில்  இன்று முற்பகல் 10.45 மணியளவில் மர்மப் பொருள் வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சந்திரகுமார் பிரதீபன் (வயது - 20 ) என்பவரே இடது கால் பாதத்தை இழந்துள்ளார்.

காயமடைந்தவர் உடனடியாகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய வீட்டுத் திட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றின் கட்டடத் தொழிலாளியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.