மல்லாகத்தில்-இடம்பெற்ற-விபத்தில்-ஆலய-பூசகர்-உட்பட-மூவர்-காயம்-

மல்லாகத்தில்-இடம்பெற்ற-விபத்தில்-ஆலய-பூசகர்-உட்பட-மூவர்-காயம்-

யாழ்.மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய பூசகர், அவரது ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

 

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் மல்லாகம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளை மற்றைய மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்டவேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அளவெட்டி அழகொல்லை பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த இரத்தினஐயர் மகாலிங்க சர்மா (வயது-53) என்ற பூசகரும் அவருடன் மோட்டார் சையிக்கிளில் பயணித்த அவரது ஐந்து வயது மகனும் காயமடைந்தனர்.

மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்தவரான மல்லாகம் நீதிமன்ற காவலாளியாக கடமையாற்றும் அரியாலை, பாரதி வீதியைச் சேர்ந்த சிங்கராசா மயூரன் (வயது-30) சிறு காயங்களுக்குள்ளாகி மயக்கமுற்ற நிலையில் மூவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.