மல்லாகத்தில் கழிவு ஒயில் பாதிப்புள்ள பகுதிகளுக்கு குடிதண்ணீர் வசதி

மல்லாகத்தில் கழிவு ஒயில் பாதிப்புள்ள  பகுதிகளுக்கு குடிதண்ணீர் வசதி

வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் உள்ள மல்லாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் என்பன கலக்கின்றன என அறியப்பட்ட நிலையில் இந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று மல்லாகம் பகுதயில் உள்ள கிணறுகளில கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் என்பன கலப்பது சம்பந்தமாக ஆராயும் கூட்டம வலி.வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில தெல்லிப்பழை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பொது சுகாதார பரிசோதகர்கள் வலி.வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் ஆர்.சஜீவன் மற்றும் கிராம அலுவலர்கள், வெளிக்கள அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். கிணறுகளில் ஒயில் கலப்பது சம்பந்தமாக பல விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில் தற்போது உடனடியாகபாதிப்படைந்துள்ள கிணறுகள் அமைந்துள்ள மல்லாகம் காட்டுத்துறை பகுதி மக்களுக்கு பிரதேச சபையின் உதவியுடன் நீர்த்தாங்கிகள் வைத்து குடிதண்ணீரை வழங்க நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதிகளில பத்துக்கும் மேற்பட்ட கிணறுகள் பாதிக்ப்பட்டுள்ளன என இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் தகவல்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.