யாழ்.மல்லாகத்தில் மாணவர்கள் பெரியோர்கள் கௌரவிப்பு

யாழ்.மல்லாகத்தில் மாணவர்கள் பெரியோர்கள் கௌரவிப்பு

யாழ்.மல்லாகம் கோட்டைக்காடு சைவவாலிபர் சங்க சனசமூக நிலையத்தினரால் பிரதேசத்தில் கல்வி, கலை, விளையாட்டு மற்றும் கலை, கலாசார விடயத்தில் திறமை காட்டிய மாணவர்கள் மற்றும் பெரியோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நிலையத்தில் குழந்தைவேல் கலையரங்கத்தில் நிலையத்தலைவர் சு.சுஜீதர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தனராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும், வடமாகாண சபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், வே.சிவயோகன், பா.கஜதீபன், இ.ஆர்னோல்ட், வலி.வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன், வலி.தெற்குப் பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சாதனை படைத்த மாணவர்கள், பெரியோர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் வடமாகாண சபை உ றுப்பினர்கள் வே.சிவயோகன், பா.கஜதீபன் ஆகியோர் தங்கள் 2014 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து ஒலிபெருக்கிச் சாதனங்கள், பிளாஸ்டிக் கதிரைகள் ஆகியவற்றை நூல் நிலைய உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.