மாட்டுடன் மோதி மோட்டார் சைக்கிள் விழுந்ததில் இளைஞர் பலி.

மாட்டுடன் மோதி மோட்டார் சைக்கிள் விழுந்ததில் இளைஞர் பலி.

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாடு ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, 25 வயதான குறித்த இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.