மாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்

மாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்
மாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும். ஜனாதிபதி செயலக போஷாக்கு இணைப்பாளர் டாக்டர் லலித் சந்திரதாசவும் இதில் பங்கு பற்றுவார்.
இதனடிப்படையில் நாளாந்தம் மாணவர்களுக்கு ஒரு கோப்பை மூலிகைக்கஞ்சி வழங்கப்படும். போஷாக்கு பிரச்சினைகளைக் குறைத்தல் மாணவர் வரவை அதிகரித்தல் சிறந்த உணவுப் பழக்க வழக்கங்களையும் சுகாதாரப் பழக்க வழக்கங்களையும் உருவாக்குதல், உணவுக் கலாசாரத்தைக் கட்டி எழுப்புதல் மூலம் சிறந்த பிரஜையை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.